Facebook நிறுவனத்தின் விற்பனை பங்காளராக இலங்கையில் roar அங்கீகாரம்

Roar Global
-
May 15, 2020

உலகின் அதிகம் அறியப்படும் பிராண்ட்களில் முதன்மையான ஒன்றாக பெயர்பெற்ற பேஸ்புக், இலங்கையில் தனது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளராக ரோர் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை நியமித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது. இதன்மூலம் ரோர் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட், இப்போது உள்ளூர் வணிகங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு பேஸ்புக் குடும்பத்தின் கீழ் இயங்கும் சமூகவலைதள appகளினால் பெறக்கூடிய ஆதரவையும் அவற்றின் சந்தை சார்ந்த நிபுணத்துவத்தையும் இலங்கையில் வழங்க முடியும். குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் உள்ளூர் வணிகங்களுக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளின் போதும் அதற்குப் பிறகும் தடைகளை களைந்து செழித்து வளர வழிகாட்டியாக உதவமுடியும்.

facebook குடும்பத்தின் கீழுள்ள Appகள்.

"தென்கிழக்கு ஆசியாவில் எங்கள் விற்பனைக் குழுக்கள் வெற்றிகரமாக விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பேஸ்புக்கின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளராக ரோர் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். roar நிறுவனம் கொண்டுள்ள வலுவான உள்ளூர் சந்தை நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவத்துடன், இலங்கையில் உள்ள உள்ளூர் வணிகங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு இந்த சவாலான நேரத்திலிருந்து திறம்பட செயலாற்ற உதவுவதற்கும், அவர்களின் சாத்தியமான வளர்ச்சியை மேலும் விரிவிபடுத்த உதவுவதற்கும் சிறந்த ஆதரவை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று, பேஸ்புக்கில் ஆசிய பசுபிக் (APAC) பிராந்தியத்திற்கான வளர்ந்து வரும் சந்தைகளின் இயக்குனர் ஜோர்டி ஃபோர்னீஸ் கூறினார்.

பேஸ்புக்கின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளராக, roar நிறுவனமாது இலங்கையில் உள்ள உள்ளூர் வணிகங்கள் மற்றும்  ஏஜென்சிகளுக்கு உயர்தர பேஸ்புக் ஊடக ஆலோசனையை இலவசமாக வழங்கும் பயிற்சினை பெற்றுள்ளது. உள்ளூர் வணிகங்கள் மற்றும் ஏஜென்சிகள் புதிய மற்றும் அத்தியாவசிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில், Facebook workshops மற்றும் Facebook Blueprint உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை பெறும் வசதியினையும் அவர்களால் வழங்க முடியும். மேலும், roar நிறுவனம் மூலம், உள்ளூர் வணிகங்கள் மற்றும் ஏஜென்சிகளும்  தமக்கு கிடைக்கக்கூடிய கட்டண தெரிவுகளுக்கான அதிக பலன்களையும் அனுபவிக்க முடியும்; இது அவர்களது வாடிக்கையாளர்களுடனான பேஸ்புக் வழியான தொடர்புகளை அதிகம் பேண வழிவகுக்கும்.

ரோர் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட், தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான இருப்பை அமைத்துக்கொண்டுள்ள விளம்பர நிறுவனமாக விளங்குகிறது. இது பலவிதமான பரிமாணங்களில் செயல்படுகிறது: media contentகளை அவற்றின் சொந்த தளங்களில் வெளியிடுவதிலிருந்து. பிற பிராண்டுகளுக்கான contentகளை தயாரித்து தருவது, ஊடக தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவது வரை பலவிதமான முறைகளில் இயங்கிவருகிறது.

"பேஸ்புக் உடனான இந்த கூட்டாண்மை மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நமது நாட்டைப் பற்றிய நமது ஆழமான புரிதலை மேம்படுத்துவதின் ஊடாக இலங்கையில் உள்ள உள்ளூர் வணிகங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களின் சாத்தியமான வளர்ச்சியை மேலும் அதிகரிக்கத் தேவையான ஆதரவினை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றவுள்ளோம்" என roar நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான முஸ்தபா காசிம் அவர்கள் தெரிவித்தார்.

பேஸ்புக் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளர் என்றால் என்ன என்பதை மேலும் அறிந்துகொள்ளுங்கள். அல்லது roar நிறுவனத்தை தொடர்புகொள்ளுங்கள்.

END OF ARTICLE
If you found this article interesting and want to share it with your network, we have made it slightly more easier for you to do so
Subscribe!
Subscribe to the Roar Global Newsletter to stay updated on our latest company announcements and our take on the future of media in the region
Related articles