நிழற்படங்கள் மூலம் கதை சொல்லிக் கொண்டாடலாம்: Roar Showtime

Roar Media
-
December 20, 2019

Roar  தமிழ் ஆகிய எங்களின் முதன்மையான நோக்கமே சுவாரஸ்யம் மிக்க தகவல்களை கதை சொல்லும் பாணியில் உங்களுடன் பகிர்ந்துகொள்வதாகும்!!! மொழியும்நடையும் சிறந்த காட்சியமைப்புக்களும் இணையும்போது உருவாகும் கதைக்களங்களானது நிகரில்லா தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

Roar Showtime என்பது தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்களாகிய உங்களது மூன்றாவது கண்ணில் சிக்கிய உணர்வுபூர்வமான, பிரமிக்க வைக்கும் கருத்தாழமிக்க காட்சிகளை பகிர்ந்து கொள்ள அழைப்புவிடுக்கும்  புதுமையானதொரு முயற்சியாகும். உங்களுடைய மூன்றாவது கண் மூலம் திறம்மிகுந்து சொல்லப்பட்ட காட்சிகளை Roar தமிழ் சிறப்பாக தொகுத்து வழங்கிடும்.

நாங்கள் வேண்டுவது எல்லாம், “ஒவ்வொரு நாளும் புதுமைகள் நிறைந்த அற்புதமான கதைகளை விளைவிக்கக்கூடிய” உங்களது தேடல்களை நீங்கள் தொடர வேண்டும் என்பதேயாகும்:

கருப்பொருள்

இக் கருத்திட்டத்தை நாங்கள் வரும் காலங்களிலும் தொடர்ந்து நடாத்த திட்டமிட்டுள்ளோம் - அந்தவகையில் எமது முதல் கருப்பொருளாக “சமூகத்தின் வண்ணங்கள்” என்பதனை தேர்ந்தெடுத்துள்ளோம்.

இங்கு உங்களுக்கு அளிக்கப்படும் சவால் யாதெனில், குறிப்பிட்டதொரு  தனிநபரை, குழுவை அல்லது சமூகத்தை சித்தரிக்கும் வகையில் வண்ணமொன்றை  தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் கதைகளை இந்த உலகத்திற்கு சொல்வதாகும்.

எங்களது புகைப்பட தொகுப்பிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் இங்கே:  

வழிமுறைகள்

சமர்ப்பிக்கப்படும் அனைத்து புகைப்படங்களும் அப்புகைப்படங்களின்  கருப்பொருளுடன் தொடர்புடைய விளக்கவுரைகள் (Captions) காணப்படவேண்டும். அதாவது அவ்வொவ்வொரு புகைப்படமும் கதை பேச வேண்டும். விளக்கவுரை (Caption) 400 எழுத்துருக்கள் அல்லது அதற்கும் குறைவாக காணப்பட வேண்டும். விளக்கவுரையை (Caption) தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லது சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதலாம்.

ஜனவரி 18ம் திகதி 2020 வரை உங்களது புகைப்படங்களை அனுப்பலாம்.

புகைப்படங்களை பின்வரும் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கலாம்: showtime@roar.global

தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் அனைத்து Roar தளங்களிலும் ஆன்லைனில் வெளியிடப்படும்: Roar தமிழ்,  Roar Media மற்றும் Roar Sinhala

விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

  • நிறத் திருத்தங்கள் போன்ற அடிப்படை திருத்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • ‘டிஜிட்டல் சித்திரங்கள்’ (Digital arts) எனக் கருதப்படும் படங்கள் அனுமதிக்கப்படாது
  • புகைப்படங்கள் மக்களை உள்ளடக்கியிருப்பின், முன்கூட்டியே அப்படங்களில் தோன்றும் நபர்களிடமிருந்து முன் அனுமதி / ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  • புகைப்படங்கள் அசலாக இருக்க வேண்டும் மற்றும் அவற்றை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.
  • சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களுக்கான நம்பகத்தன்மையின் சான்றுகளை சமர்ப்பிக்குமாறு பங்கேற்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.  (EXIF Data விரும்பப்படுகிறது)
  • அனைத்து சமர்ப்பிப்புகளையும் வெளியிடுவதற்கான ஆக்கபூர்வமான உரிமைகளை ரோர் குளோபல் தக்க வைத்துக் கொள்ளும். இருப்பினும், சமர்ப்பிப்புகளின் இறுதி உரிமை புகைப்படக்காரர் / பங்கேற்பாளரின் பெயரிலேயே காணப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் புகைப்பட உரிமையாளருக்கு அறிவிக்கப்படும். பங்கேற்பாளர்கள் புகைப்படத்துடன் தங்கள் முழு பெயர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் அடையாள தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • நீங்கள் எவ்வகையான உபகரணங்களையும் பயன்படுத்தலாம்: அனலாக் முதல் டிஜிட்டல் கேமராக்கள் முதல் உங்களது கைபேசி வரை நீங்கள் உபயோகிக்கலாம். கதையொன்றைச் சொல்ல உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் வரை, நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

மனதில் கொள்ள வேண்டிய விடயங்கள்

  • மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் புகைப்படம் எடுக்கும் நபர்களுகோ அல்லது காட்சிகளுக்கோ எவ்வித ஆட்சேபனையும் இருக்கக்கூடாது. அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால், புகைப்படத்தை எடுக்க வேண்டாம்.
  • உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் நீங்கள் தேடலில் ஈடுபடும்போது கவனமாக இருங்கள். அத்துமீறல்களில் ஈடுபடவேண்டாம்.
  • வாருங்கள்! வெளி உலகில் உங்களின் தேடல்களை ஆரம்பிக்கலாம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

END OF ARTICLE
If you found this article interesting and want to share it with your network, we have made it slightly more easier for you to do so
Subscribe!
Subscribe to the Roar Global Newsletter to stay updated on our latest company announcements and our take on the future of media in the region
Related articles